மயிலாடுதுறை ஆராய தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை ஆராய தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
X

மயிலாடுதுறை ஆராய  தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆராய தெரு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மேல ஆராயத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை அமைக்கப்பட்டு, நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

பின்பு, பூர்னா குதி நடைபெற்று, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , வான வேடிக்கை நடைபெற்று, புனித கலச நீர் கடங்கள் புறப்பட்டது ,பின், கருடன்கள் வானில் வட்டமிட ,ஓம்சக்தி, பராசக்தி, என பக்தர்கள் முழக்கமிட, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர்.

Tags

Next Story