மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுந்தர மூர்த்தி.

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சுந்தரமூர்த்தி(34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது சுவர் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் 9-ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும், கட்டாயப்படுத்தியும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்த சிறுமியை அவரது பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!