மகாசிவராத்திரியையொட்டி மயிலாடுதுறையில் பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு

மகாசிவராத்திரியையொட்டி மயிலாடுதுறையில்  பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு
X

பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மகாசிவராத்திரியையொட்டி மயிலாடுதுறையில் பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் மகாசிவராத்திரியையொட்டி 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. இதில் பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என திரளான பக்தர்கள் பனிலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!