மகாராஜபுரம் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு

மகாராஜபுரம் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு
X

மகாராஜாபுரம் நாகாத்தம்மன் ஆலயத்தில் நடைபெற்ற  மகா கும்பாபிஷேகம்.

மகாராஜபுரம் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜாபுரத்தில் பழைமை வாய்ந்த கிராமத்து ஆலயமான நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் மற்றும் நாகாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture