மயிலாடுதுறை: மிக பழைமையான மகாலிங்கசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மிக பழைமையான மகாலிங்கசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
X
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் மகாலிங்க சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக பழைமையான மகாலிங்கசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் கவரத் தெருவில் அமைந்துள்ளது மிக பழைமையான மகாலிங்கசுவாமி திருக்கோயில். தமிழகத்தில் சதுரகிரி, திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் உள்ளது போன்ற மிக பழைமையான, புகழ்பெற்ற மகாலிங்கசுவாமி திருத்தலம் இது.

இக்கோயில் நீண்டகாலத்திற்கு பின், புனரமைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக யாகசாலையில் நான்குகால பூஜைகள் நடைபெற்று. வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிவவாத்தியம், மேள தாளங்கள், வானவேடிக்கை முழங்க, கடங்கள் புறப்பட்டது சரியாக காலை 8.45 மணியளவில் வானில் கருடன் வட்டமிட, வேதியர்கள் மந்திரம் ஓதி கோயில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிசேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து கும்பாபிஷேகத்தை கண்டு களித்து, மகாலிங்கசுவாமியின் அருளை பெற்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself