சீர்காழி அருகே பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு

சீர்காழி அருகே பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு
X

சீர்காழி அருகே மத்தளடையான் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சீர்காழி அருகே மத்தளடையான் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மத்தளமுடையான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு விமானத்தை அடைந்தது அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதவது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு களிமேடு கிராமத்தில் நடைபெற்ற விபத்து தமிழகம் முழுவதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அனைவருக்கும் உரிய இழப்பீடும் வழங்கிய தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் உள்ள அணைத்து ஆதீனங்களையும் அழைத்து தெய்வீக பேரவை என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்ற கோரிக்கை ஏற்றதற்கும் தமிழக கோவில்கள் மற்றும் திருமடங்களை பாதுகாக்க அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்ளை தெரிவித்து கொள்கிறோம்.ஆதீனங்களுக்கு வருபவர்கள் மீது அரசியல் ரீதியாக கருப்புக்கொடி காட்டும் சட்ட விரோத சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனகர்த்தர்களை பக்தர்களாகிய நாங்கள் தூக்கிக் கொண்டாடும் பட்டினப்பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை எதிர்த்து போராடும் திராவிடர் கழகம் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது கடவுளை மறுப்பது அவர்கள் கொள்கை கடவுளை ஏற்பது எங்களுடைய கொள்கை. மடாதிபதிகளை மிரட்டி பார்க்கும் இதுபோன்ற சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சிதம்பரம் நடராஜ பெருமான் குறித்து அவதூராக சித்தரித்து யூட்யூபில் வெளியிட்ட யூடியூபர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோவில்களுக்கு தொடர்ந்து குடமுழுக்கு விழா நடத்தி வரும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் அதேபோல் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். இசைஞானி இளையராஜா பாரத பிரதமர் குறித்த முன்னுரை எழுதியதற்கு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதிய வன்மத்தோடு பேசியிருக்கிறார் இதற்காக எந்தக் கட்சிகளும் இதுவரை கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஏன்? அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உரிய நிதியை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு மத்திய அரசோடு முரண்பாடு இல்லாமல் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் பழனி ஆதீனம்,ராம. ரவிக்குமார் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ஆர்.கே ராமலிங்கம் பாரதமாதா விநாயகர் சதுர்த்தி குழு. சசிகுமார் மாநிலத் தலைவர் சிவசேனா.குமாரவேலு நாயனார், வலசை.பிரியா பொதுச்செயலாளர் இந்து புரட்சி முண்ணனி.வி எஸ் கே. தமிழ்ச்செல்வன் தமிழக இந்து மக்கள் முன்னணி தலைவர். ஜி.கே.சங்கீதா வள்ளுவ நாயனார் அனைத்திந்திய திருவள்ளூர் கூட்டமைப்பு மாநில மகளிர் அணி தலைவர்.ஜோதி குமரன்,இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவர்.ரமேஷ் இந்து புரட்சி முன்னணி மாவட்ட ஊடகப்பிரிவு.பால .வினோத்குமார் பொருளாளர் இந்து புரட்சி முண்ணனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!