சீர்காழி அருகே கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே  கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
X

சீர்காழி அருகே சட்டநாதபுரம்அருள்மிகு கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோயிலில் நடந்த குடமுழுக்கு

சீர்காழி அருகே சட்டநாதபுரம் அருள்மிகு கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே சட்டநாதபுரம் 100 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்து கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து நவக்கிரக ஹோமம் நடைபெற்று யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.இன்று காலை நான்காவது கால யாகசாலை முடிவடைந்து இறுதியாக பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது.9:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தி வைத்தனர். இவ்விழாவில் சீர்காழி,சட்டநாதபுரம் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது