மயிலாடுதுறை மதுர காளியம்மன் கோயிலில் 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா

மயிலாடுதுறையில், பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில், 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்.
மயிலாடுதுறை தாலுக்கா திருஇந்தளூர் ஆழ்வார்குளம் பகுதியில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாதம் கடைவெள்ளியை முன்னிட்டு, 63-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, விரதமிருந்து காப்புக் கட்டிய பக்தர்கள், காவிரிக்கரையில் இருந்து கரகம் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர். மேலும், பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர்.
வழியெங்கும் பக்தர்கள் கரகத்துக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். கோயிலின் முன்பு தீக்குண்டம் வளர்க்கப்பட்டு, கரகம் மற்றும் அலகு காவடி எடுத்துவந்த பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித் திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu