செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி

செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி
X

உள்ளாட்சி தேர்ததலை அமைதியாக நடத்துவதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடப்பதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 வது வார்டு க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 9ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி. மு. க., அ. தி. மு. க.,அ.ம.மு.க. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று காட்டுச் சேரி ஊராட்சியில் போலீசாரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாக்மேக் தலைமை தாங்கினார். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.

போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அடங்கிய குழுவினர் காட்டுச்சேரி கடைத்தெருவில் இருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!