சீர்காழி புறவழிச்சாலை மதுபான கடை எதிரே இறந்து கிடந்தவர் பற்றி விசாரணை

சீர்காழி புறவழிச்சாலை மதுபான கடை எதிரே இறந்து கிடந்தவர் பற்றி விசாரணை
X

சீர்காழி பைபாஸ் சாலை டாஸ்மாக் கடை அருகே முருகன் என்பவர் சடலமாக கிடந்தார்.

சீர்காழி புறவழிச்சாலை மதுபான கடை எதிரே இறந்து கிடந்தவர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் சட்டநாதபுரம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.இந்த மதுபான கடைக்கு எதிரே கருவேலமரக் காட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (வயது 53) என தெரியவந்தது. இவர் எப்படி இந்த பகுதிக்கு வந்தார் எதற்காக வந்தார் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த சீர்காழி போலீசார் இச்சம்பவம் கொலையா?தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதே நேரம் தொடர் உயிரிழப்புக்கு காரணமாகும் புறவழிச்சாலை அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!