இளைஞரை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை

இளைஞரை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை
X

கொலை வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

மயிலாடுதுறையில் இளைஞரை கொலை செய்த மாற்றுத்திறனாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட ஊருகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் முரளி (26). கூலித்தொழிலாளியான இவருக்கும் இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜெகதீசன் என்கிற தேவதாஸ்(30) என்பவருக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி இரவு தேவதாஸ் சைக்கிளை முரளி எடுத்துச் சென்று பழுதாக்கியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை குத்தியதில் படுகாயமடைந்த முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவதாசை கைது செய்தனர்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வழக்கில் 21 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவில், தேவதாசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு அளித்தார். இது மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டாவது ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future