மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பணிக்கு பூமிபூஜை

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பணிக்கு பூமிபூஜை
X

நூலகம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பூமிபூஜை போடப்பட்டது.

மயிலாடுதுறையில் நகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தார்.

தருமபுரம் சாலை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி எதிர்புறம் முதல் மாடியுடன் 4 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூல்களை கூட இங்கிருந்து கம்ப்யூட்டர் மூலம் நகலெடுத்து படிக்கும் வகையில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட உள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். முதல் சாதாரண அலுவலர் தேர்வுக்கான அனைத்து நூல்களும் இங்கு அமையப் பெற உள்ள நூலகத்தில் இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி பொறியாளர் சனல்குமார் உள்ளிட்ட நகராட்சிதுறை அதிகாரிகள் முன்னாள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!