மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் மயிலாடுதுறை மழலை சகோதரிகள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் மயிலாடுதுறை மழலை சகோதரிகள் சாதனை
X

கராத்தே போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த மயிலாடுதுறை மழலை சகோதரிகள்.

மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் மயிலாடுதுறை மழலை சகோதரிகள் சாதனை படைத்து உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் பரசலூர் கிராமத்தை சார்ந்த வாணிஸ்ரீ- ஜனார்த்தனன் தம்பதியரின், மகள்கள் ச.வா.செந்தமிழினியா(வயது 8), ச.வா.தமிழோவியா(வயது 5), இந்த சகோதரிகள் 10-04-2022 அன்று ரியோ கோ சிட்டோ ரியோ கராத்தே டோ, திருச்சி நேஷனல் கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில், ஹிட்டோசி சிட்டோ ரியோ கராத்தே டோ இந்தியா, பள்ளி சார்பில் கலந்து கொண்டு கத்தா மற்றும் குமித்தே இரண்டு பிரிவுகளில், ச.வா.செந்தமிழினியா 2 தங்க பதக்கங்களையும், இவரின் சகோதரி ச.வா.தமிழோவியா கத்தா பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று, நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் தங்க பத்தகங்களை வென்று வருகிற ச.வா.செந்தமிழினியா அவர்களோடு தற்போது அவரின் சகோதரியும் பதக்க கணக்கை துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இந்த மழலை சகோதரிகளுக்கும், பயிற்சியாளருக்கும், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி