/* */

செம்பனார்கோயில்,குத்தாலம் ஒன்றியங்களில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

செம்பனார்கோயில்,குத்தாலம் ஒன்றியங்களில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செம்பனார்கோயில்,குத்தாலம் ஒன்றியங்களில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்
X

மயிலாடுதுறை அருகே வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி ஊராட்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனுசியா-அறிவழகன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில், செம்பை ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட தி.மு.க .பொருளாளர் ஜி.என்.ரவி, கலைமகள் பள்ளி தாளாளர் குடிஅரசு ஒன்றிய துணை தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. பிரமுகர் எம்.ஆர்.ஜே.முத்துக்குமார், செம்பை ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் மனோகரன், பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி, மற்றும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபி தலைமையில் நடைபெற்றது.

இதில், குத்தாலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மங்கை சங்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன், காந்திமதி, பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் மற்றும் மருத்துவர்கள் மருத்துவ குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இலவசமாக மருந்து- மாத்திரைகள் தடுப்பூசி போடப்பட்டது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் தடுப்பூசி போடப்பட்டது.

Updated On: 30 March 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.