மயிலாடுதுறையில் பசுவிடம் பால் குடித்த ஆட்டுக்குட்டி: வைரலாகும் வீடியோ

மயிலாடுதுறையில் பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி.
மயிலாடுதுறையில் பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் செருதியூரில் ஆறுமுகம் என்ற விவசாயி தனது வீட்டின் பின்புறத்தில் மாட்டுக் கொட்டகையில் ஆடு மாடு மற்றும் கோழி ஆகிய கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய பசு மாட்டினை தனது மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த போது அவர் வளர்த்த ஆடு ஒன்று தனது பசியை போக்கிக் கொள்ள பசு மாட்டிடம் பால் குடித்தது.
இந்த ஆட்டுக்குட்டி பசு மாட்டிடம் பால் குடித்த இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த காட்சி வாட்ஸ்அப் மற்றும் முக நூலில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu