குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்
X

கடை ஞாயிறு உற்சவத்தில் புனித நீராடிய பக்தர்கள். 

குத்தாலத்தில், கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில், திரளான பத்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஓளி படைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஓளி வழங்க முடியாமல்போனது. இதனையடுத்து, சூரிய பகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம், ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தீர்த்தவாரி உற்சவம், குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையன்று ஶ்ரீசோழிஸ்வரர், ஸ்ரீமன்மதீஸ்வரர், ஸ்ரீசெங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து சாமி மற்றும் அம்மன் மங்கள வாதியங்கள் ஒலிக்க, வீதி உலாவாக காவிரி கரைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture