திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மார்ச் 27 ல் கும்பாபிஷேக விழா
திருக்கடையூர் கும்பாபிஷேகம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் அறிவிப்பு. 73 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலைபூஜை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதும் தேவார பாடல் பெற்றதும், அபிராமி பட்டர் வாழ்க்கையில் அமாவாசையை பவுர்ணமி ஆக்கிய புராண நிகழ்வு நடைபெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அட்டவீரட்ட தலங்களில் முதலாவதான இக்கோயிலில் எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயருக்கு அனுகிரகம் செய்த தலம். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில்; காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று திருக்கடையூரில் கும்பாபிஷேக பணிகள் குறித்து தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானம் செய்தியாளர்களிடம் திருக்கடையூர் கும்பாபிஷேகம் பற்றி பேசியதாவது: மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில்; காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி 73 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அரசு வழிகாட்டு முறைகளின்படி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu