மயிலாடுதுறை: கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா கோரிக்கை

மயிலாடுதுறை: கோயில்களில்  கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா கோரிக்கை
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மகா சபா கட்சியினர் மனு கொடுக்க வந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ராம.நிரஞ்சன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்திலும் திருப்பணி நடைபெறும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் மட்டும் திருப்பணி தொடங்காமல் இருக்கிறது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில், தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில், திருவாளப்புத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் கோயில், சோழன்பேட்டை தான்தோன்றீஸ்வரர் கோயில், திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இக்கோயில்களில் விரைவில் திருப்பணி தொடங்காவிட்டால் மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!