திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு நாள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முகப்பு தோற்றம் (பைல் படம்).
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 1997 ஆம் ஆண்டு மாசி மாதம் 26-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் , இன்று முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், 3 -யாக குண்டங்கள் அமைத்தனர். மேலும், 20- சிவாச்சாரியார்கள் திருமுறை பாராயணம், வேத பாராயணம், மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க புர்ணாவதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து , அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் மற்றும் கால சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu