தரங்கம்பாடி அருகே பூர்ணா புஷ்களாம்பிகா கோவில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே பூர்ணா புஷ்களாம்பிகா கோவில் கும்பாபிஷேகம்
X

விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

தரங்கம்பாடி அருகே உடையார் கோவில் பத்து பூர்ணா புஷ்களாம்பிகா கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சி உடையார்கோவில்பத்து கிராமத்தில் எழுந்தருளியிருங்கும் பூர்ணா புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீ ஐயனார் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வேதவிற்பன்னர்கள் நான்குகால பூஜை செய்து இன்று மகா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கை விண்னை எட்ட, புனிதநீர் அடங்கிய கடங்களை வேதவிற்பன்னர்கள் சுமந்து சென்று, வேத மந்திரம் ஒலிக்க கோயில் சுற்றி வலம்வந்து விமான கோபுர கலசத்தை அடைந்து புனிதநீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story