உடைப்பு அபாயத்தால் கொள்ளிடம் கரை கண்காணிப்பு- அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்களை பாதுகாப்பது மற்றும் போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்
ஆறுகளில் உள்ள முகத்துவார பகுதிகளில் அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வடிகால் வாய்க்காலுக்கு செல்லக் கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும். மழை நீர் சூழ்ந்து இருக்கும் குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு முகாம்கள் ஏற்படுத்தி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் 80 ஆயிரம் கனஅடி உபரி நீர் கடலுக்கு செல்வதால் கரைகள் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி பகுதி தொடர்ந்து அதிகாரிகளைக் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu