ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹாரம்

ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹாரம்
X
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, காலசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

எமனை காலால் சுவாமி எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில் என்பது ஐதீகம்.இதையொட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று இரவில் இக்கோயிலில் எமசம்ஹார திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா கடந்த வாரம் 17 ஆம் தேதி கொடியேற்றத்தடன் தொடங்கியது. இதில் 6ஆம் நாள் முக்கிய நிகழ்வான எமசம்ஹாரம் இரவு நடைபெற்றது.

இதையொட்டி, காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு ஆலய வெளிப் பிரகாரத்தில் வீர நடன காட்சியுடன் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர்.

அங்கு எமன் மார்க்கண்டேயரை துரத்தும் காட்சியும், இறைவன் காலனை வதம் செய்யும் எமசம்ஹாரமும் நடைபெற்றது. இதில் அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி குறைவான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், விழா நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!