மயிலாடுதுறை அருகே கபடி வீரர்களுக்கு எம்.எல்.ஏ. சீருடை வழங்கினார்

மயிலாடுதுறை அருகே கபடி வீரர்களுக்கு  எம்.எல்.ஏ. சீருடை வழங்கினார்
X
மயிலாடுதுறை அருகே நடந்த கபடி போட்டியை நிவதோ முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை அருகே கபடி வீரர்களுக்கு எம்.எல்.ஏ. நிவேதா முருகன் சீருடை வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், திருக்கடையூரையடுத்த பிள்ளைப்பெருமாள் நல்லூர் ஊராட்சி -திருமெய்ஞானம் பகுதியில், தமிழர் திருநாளை முன்னிட்டு ஜீவா பிரதர்ஸ் & சிவராமன் மெமோரியல் இணைந்து முதலாம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. பிரமுகர் எம்.வி.ஸ்டாலின், செம்பை தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசின் உத்தரவின்படி 80 நபர்கள் மட்டுமே பார்வையாளர்கள் கலந்துகொண்டு கபடி விளையாட்டை கண்டுகளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்