மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

மயிலாடுதுறை அருகே பீரோல்கள் உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் 35. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி இலக்கியா (27) இரண்டு குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ளார். அவ்வப்போது இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். கடந்த 9ஆம் தேதி சென்று வந்தவர் மீண்டும் நேற்று மதியம் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியா உள்ளே சென்று பார்த்தபோது பீரோல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் தங்க தாலி செயின், 800 கிராம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இலக்கியா குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!