திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு அருளாசி

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு  அருளாசி
X

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி வழங்கி ஆதீனகர்த்தர் அருளாசி

இதையொட்டி ஞானமா நடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி அளித்து ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இவ்வாதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தற்போது அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா ஆதீன மடாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஞானமாநடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விழாவில் பல்வேறு சமுதாய மக்கள் சேவையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு "மனிதநேய மாமணி" என்ற பட்டத்தை வழங்கி பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு ஆதீனகர்த்தர் வஸ்திரங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். இதனை தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!