/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் இன்று ஜமாபந்தி  துவக்கம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தியை கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி எனப்படும் ஜமாபந்தி இன்று தொடங்கியது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா பங்கேற்றார்.

இன்றைய ஜமாபந்தியில் மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு வருவாய் சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூர், மணல்மேடு, கிழாய், கேசிங்கன், ஆத்தூர் பூதங்குடி மற்றும் நமச்சிவாயபுரம் ஆகிய 9 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.

இதில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். வருகின்ற 25 ஆம் தேதி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கூட்டத்தில் வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குத்தாலம் சீர்காழி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 May 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...