மயிலாடுதுறையில் ஜெயின் சங்கத்தினர் நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் ஜெயின் சங்கத்தினர் நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்
X

மயிலாடுதுறையில் ஜெயின் சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் ஜெயின் சங்கத்தினர் நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையுடன் ஜெயின் சங்கம், ஸ்ரீஜெயின் யுவா மண்டல், சி.சி.சி. சமுதாயக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் மகாதானத்தெருவில் உள்ள எஸ்.எஸ்.ஜெயின் சங்கக்கட்டிடத்தில் நடைபெற்றது.

ஆச்சாரியா ஸ்ரீசுதர்சன் முனி ஜனம் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டார். யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர்சந்த் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மருத்துவ குழுவினர் பங்கேற்று, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பொது மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் ஜெயின் சங்க உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்