குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அறிமுகம்

குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அறிமுகம்
X
குத்தாலம் ஒன்றியத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள்அறிமுகம் செய்யப்பட்டனர்.
குத்தாலம் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான தி.மு.க.வினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மங்கநல்லூரில் நடைபெற்றது.

வருகின்ற 9.10.2021 அன்று நடைபெற இருக்கின்ற காட்டுச்சேரி மற்றும் தத்தங்குடி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களாக தத்தங்குடி ஒன்றியக்குழு வேட்பாளராக ரமேஷ் ராக்கெட், காட்டுச்சேரி ஒன்றியக்குழு வேட்பாளராக செல்வம் ஆகியோர்களை மங்கைநல்லூர் மற்றும் பொறையாரில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். .

இந்நிகழ்ச்சில் நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!