நேபாளத்தில் நடந்த சர்வதேச போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

நேபாளத்தில்  நடந்த சர்வதேச போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு பாராட்டு
X
சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நேபாளத்தில் நடந்த சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நேபாள் நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் தடகள போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற எஸ்.எஸ்.என். அகாடமி மாணவன் மனோஜ்குமார் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார், இதுபோல் நேபாள் நாட்டில் நடைபெற்ற 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சுபானு என்ற மாணவி தங்கப்பதக்கம் வென்றார்,

இந்நிலையில் இன்று சீர்காழி தென்பாதி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தடகள போட்டி மற்றும் யோகாவில் தங்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .

பெஸ்ட் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் பெஸ்ட் பள்ளி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் சீர்காழி கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கம் வென்ற மாணவர்களை பாராட்டினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!