உபரிநீர் வெளியேற தடையாக இருந்த உப்பனாற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

உபரிநீர் வெளியேற தடையாக இருந்த உப்பனாற்றில்  ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்
X

உப்பனாறு பகுதியில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு பொதுப்பணித்துறை சார்பில் மகிமலையாறு உபரிநீர் வெளியேற தடையாக இருந்த, உப்பனாறு பகுதியில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு ஆறுகளில் உபரிநீர் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மகிமலையாற்றில் இருந்து உபரி நீர் உப்பனாற்றின் வழியாக கடலில் கலக்கும். கடந்த ஒரு வாரமாக நொடிக்கு 1150 லிருந்து 1200 கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

உபரிநீர் வெளியேறும்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஆகாயத்தாமைரைகள் பொறையாறு கடைமடைப் பகுதியான ஒழுகைமங்கலம் ஆற்று பாலத்தில் நீரோட்டம் செல்ல முடியாமல் அடைத்து, தண்ணீர் தெரியாத அளவிற்கு தேங்கியது. இதனால் உபரிநீர் தங்குதடை இல்லாமல் வெளியேற இடையூறு ஏற்பட்டது. இதை அறிந்த மயிலாடுதுறை பொதுப்பணித்தறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி உத்தரவின் பேரில், உப்பனாற்றில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள் அப்புறப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!