மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
X

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்தும் பணி நகராட்சி சார்பில் நடந்து வருகிறது.

மயிலாடுதுறையில் உலக புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டம்‌ உள்ளது. கங்கை முதலான புண்ணிய

நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் துலாகட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்

கொண்டதாக ஐதீகம். இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களில்

இருந்து சுவாமி, அம்பாள் துலா கட்டத்தில் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும்.

இந்நிலையில் இந்த காவிரி துலாக்கட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற காவிரி மகா

புஷ்கரத்தில் பக்தர்கள் புனித நீராட புஷ்கர தொட்டி அமைத்தபோது 12 கிணறுகள்

மீட்கப்பட்டது. 12 ராசிகளுக்குரிய கிணறுகளாக கருதப்பட்டு அவை புதுப்பிக்கப்பட்டு காவிரி

மகாபுஷ்கரவிழா நடைபெற்றது. பலலட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

இந்த கிணற்று நீரில் பக்தர்கள் நீராடினால் தங்கள் பாவங்கள் போக்கி விடும் என்பது‌ ஐதீகம்.

இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள்

‌வந்து செல்வர். ஆனால் காவிரி துலாக் கட்டம் தற்போது மிகவும் மோசமான நிலையில்

புல்புதர்களாலும், குப்பைகளாலும் மூடப்பட்டுக் கிடக்கிறது.

மேலும் உடைந்த மதுபான பாட்டில்கள், அழுகிய பழங்கள், மருத்துவ கழிவுகளும் குவிந்து கிடந்தன.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில்

காவிரி துலாக்கட்டத்தை தூய்மை செய்யும் பணிகள் துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். காவிரி

துலாக்கட்டத்தை நகராட்சிதுறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால்

ஆன்மீக அன்பர்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 12 ராசிகளுக்குரிய

கிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராட ஏதுவாக தண்ணீர் நிரப்பப்படும் என்றும் நகராட்சி துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story