சீர்காழி தனியார் பள்ளியில் இந்திய கலாச்சாரம் குறித்த கண்காட்சி
சீர்காழி தனியார் பள்ளியில் இந்திய கலாச்சாரம் பற்றிய கண்காட்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியாவின் கலாச்சாரம் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் இந்த கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் இந்தியாவின் முப்படைகளான தரைப்படை ,கப்பற்படை, விமானப்படை ஆகிய படைகளில் பங்கு பெற்றுள்ள முக்கிய போர் தளவாடங்கள், ஏவுகணைகள் போர்க்கப்பல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன .
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சிறப்புகள் குறித்தும், அந்தந்த மாநிலங்களின் உணவு ,நடனம் விவசாயம் குறித்தும் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் அணியும் உடைகளை சின்னஞ்சிறு குழந்தைகள் அழகாக வேடமிட்டு கண்காட்சியில் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் அனைத்து பருவ காலநிலை மாற்றம் குறித்தும் ,இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களில் விளையும் பயிர்கள் குறித்தும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. விவேகானந்தா பள்ளி குழுமத்தின் தாளாளர் ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், விவேகானந்தா பள்ளியின் இயக்குனர் பிரவின் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu