மயிலாடுதுறையில் 60 சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்

மயிலாடுதுறையில்  60 சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்  மகளிருக்கு  இலவசம்
X
மயிலாடுதுறை மாவட்ட 3 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள 60 சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள 60 சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நகரப் பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமாக பெண்கள் அரசு டவுன் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் 8ம் தேதியான இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.அதனடிப்படையில் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இன்று முதல் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பேருந்து இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனைகளில் மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனையில் 38 பேருந்துகளும், சீர்காழியில் போக்குவரத்து கழக பணிமனையில் 17 பேருந்துகளும், பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஐந்து பேருந்துகள் என மொத்தம் 60 சாதாரண நகர கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மகிழ்ச்சியுடன் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இலவசமாக பயணம் செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!