கீராநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலைநிகழ்ச்சி

கீராநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலைநிகழ்ச்சி
X

கீராநல்லூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியை ரசித்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்.

கீராநல்லூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல்லம் தேடி கல்வி குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரஞ்சித் தலைமையிலான கலை கலைக் குழுவின் சார்பாக மாணவர்களுக்கான கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கம் அளித்து நாடகங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்கும் பட்டதாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அரசு வழங்கும் ஊக்க தொகை மற்றும் சான்றிதழ்கள் குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள், மாணவ,மாணவிகள்,பள்ளி மேம்பாட்டு குழுவினர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!