மயிலாடுதுறை நகரில் இல்லம் தேடிக்கல்வி மையம் துவக்கம்

மயிலாடுதுறை நகரில் இல்லம் தேடிக்கல்வி மையம் துவக்கம்
X
மயிலாடுதுறை நகரில் இல்லம் தேடி திட்டத்தில் கல்வி மையம் துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது, பள்ளிகள் இயங்காததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனை வளர்க்கும் நோக்கில் தமிழக அரசு, இல்லம்தேடிக்கல்வி திட்டத்தை தொடங்கியது. இதற்காக தன்னார்வலர்களை நியமனம் செய்து இல்லம்தேடிகல்வி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறையில் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி, இவேராத்தெரு அங்கன்வாடி மையம், சேந்தங்குடி நகராட்சி தொடங்கப்பள்ளி, திருவிழந்துர் தோப்புத்தெருகாளியம்மன்கோயில், அகரகீரங்குடி தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் இல்லம்தேடி கல்விமையம் தொடங்கிவைக்கப்பட்டது. இதேபோல், திருவிழந்தூர் தோப்புத்தெரு காளியம்மன்கோயிலில் இல்லம்தேடி கல்விமையத்தை தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வித்திறனை வளர்த்துகொள்வதற்கு இதனை பயன்படுத்தி கொள்ள பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும். இதில் மாவட்ட கல்வி அலுவலர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை ஆர்.டி.ஓ.பாலாஜி கல்வி மையத்தை தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!