மயிலாடுதுறையில் இந்திய மருத்துவர் சங்க டாக்டர்கள் பங்கேற்ற மாரத்தான்

மயிலாடுதுறையில் இந்திய மருத்துவர் சங்க டாக்டர்கள்  பங்கேற்ற மாரத்தான்
X

மயிலாடுதுறையில் ஐஎம்ஏ டாக்டர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் எஸ்.பி. சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் இந்திய மருத்துவர் சங்க டாக்டர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பங்கேற்ற கிழக்கு மண்டல அளவிலான கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மீட் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதன் முதல் பகுதியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்திய மருத்துவ கழகம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் தொடங்கிய மாரத்தான் போட்டி ஐந்து கிலோமீட்டர் கடந்து மணக்குடியில் நிறைவடைந்தது. வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture