குத்தாலம் அருகே அரசங்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்தது எப்படி?
அரசங்குளத்தில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த குளத்தை சந்திரகாசன், அவரது மகன் சங்கர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் 28-ஆம் தேதியான நேற்று காலைமுதல் குளத்தில் மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்க தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதுவரை இறந்து கரை ஒதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்களை குத்தகைதாரர் அப்பறப்படுத்தி புதைத்துள்ளார். தண்ணீர் கெட்டுவிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டதில் தண்ணீர் நல்ல நிலையில் உள்ளதாகவும், குளத்தில் தண்ணீர் அருந்திய நாய், மீன்களை தின்ற பாம்பு, தவளைகள் இறந்துள்ளதால் குளத்தில் மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளனர் என்று தெரிவித்த குத்தகைதாரர் இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்றும் ஏராளமான மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. குளத்தில் விஷம் கலந்துள்ளதை உறுதிபடுத்த குளத்தில் இருந்து தண்ணீரையும், இறந்த மீன்களையும் தஞ்சாவூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை துறைக்கு ஆய்வுக்கு எடுத்துசெல்ல உள்ளதாகவும், குளத்தில் விஷம் கலந்தவர்களை கண்டறிந்து பெரம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu