பரசலூரில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

பரசலூரில் தீ விபத்தில் வீடு  எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி
X

பரசலூரில்  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் நிவாரண உதவி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூர் சீனிவாசபுரத்தை சார்ந்த லலிதா முருகேசன் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதமடைந்தது.

தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதேபோன்று தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். செம்பனார்கோவில் சைன் லயன் சங்கம் சார்பில் ஷைன் லயன் முனைவர் சாம்ராட் கே.பாலையா ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதில் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், செம்பனார் கோவில் வட்டார வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர், லயன் விஷ்ணு, உத்திராபதி, பழணி வேந்தன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!