மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் அகில இந்திய இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் வங்காள தேச நாட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பங்களாதேஷில் இந்துக்களை படுகொலை செய்தும், பெண்களை மானபங்கப்படுத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பங்களாதேஷ் அரசுக்கு மத்திய அரசு அழுத்தம்கொடுக்க வேண்டும், இந்துக்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜெய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி செயலாளர் தினேஷ் ஆலயபாதுகாப்பு பிரிவு மாநில அமைப்பு செயலாளர் வேலன், மாவட்ட செயலாளர் உமாசங்கர், மாவட்ட மாணவரணி தலைவர் ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags

Next Story
ai in future agriculture