திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதி சாமி தரிசனம்

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  உயர்நீதிமன்ற நீதிபதி சாமி தரிசனம்
X

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் 

இக்கோவிலில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பது சிறப்பாகும்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஆயுள் ஹோமம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், அபிராமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து, தங்களது ஆயுள் விருத்திக்காகவும், நல்வாழ்விற்காகவும் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி செய்து வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், சிறப்பு ஹோமங்கள் நடைபெறும் போது கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தம்பதியினருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

இந்நிலையில், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றன. பூஜைகளை கணேச குருக்கள் செய்து வைத்தார் முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. நீதிபதி வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story