நேதாஜி ஐ.என்.ஏ.ராணுவப் படை வீரர்களின் வாரிசுகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நேதாஜி ஐ.என்.ஏ.ராணுவப் படை வீரர்களின் வாரிசுகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

நேதாஜி ஐ.என்.ஏ.ராணுவப் படை வீரர் வாரிசுகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய நேதாஜி ஐ. என்.ஏ ராணுவ படை வீரர்களின் வாரிசுதாரர் நல சங்கத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பென்ஷன், மெடிக்கல் பாஸ், பஸ் பாஸ், பேரக்குழந்தைகளுக்கு வழித்தோன்றல் வரை 3 சதவிகித தொழில் படிப்புகளில் இட ஒதுக்கீடு, நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வீரர்கள் சங்கத்தினர் பேனர்களை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம் கட்டிடத்தின் முன்பு தான் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலுக்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!