மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில்மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில் மாலை 3மணி முதல் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. மயிலாடுதுறை, எலந்தங்குடி, நீடூர், சோழசக்கரநல்லூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடிக்கான முதற்கட்ட பணிகள் மேற்கொண்டு வருவதால் இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!