குத்தாலம் அருகே கனமழையால் மரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சேதம்

குத்தாலம் அருகே  கனமழையால் மரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சேதம்
X

மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கனமழையால் மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் ஸ்ரீகண்டபுரம், நக்கம்பாடி, பாலையூர், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம் ஆகிய கிராமங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. இதில், கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் தெற்குத் தெருவில் தூங்குமூஞ்சி மரம் ஒன்றோடு தரையில் சாய்ந்தது.

மரத்தின் கிளை அருகில் உள்ள மின்கம்பியில் உரசியதில் அப்பகுதியில் உள்ள 3 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. கோனேரிராஜபுரம் ஊராட்சியில் கடந்த 50 வருடங்களாக மின் கம்பங்கள், கம்பிகள் ஆகியவை மாற்றப்படவில்லை என்றும் இதுகுறித்து கடந்த இரண்டு வருடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லும் கிராமமக்கள், பெருமழைக்காலம் தொடங்கும் முன்னர் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, சேதமடைந்துள்ள மற்ற மின்கம்பங்களையும் மாற்றி விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai as the future