மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்  உண்ணாவிரதம்
X

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருந்தனர்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் முழுநேரமாக பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்கள் நிலை- 2 பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 1002 தனி திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை தொடர்ந்து நிலை நிறுத்தி மக்கள் நலனை காத்திட வேண்டும், சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!