'பள்ளி அருகே குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும்' மயிலாடுதுறை எஸ்.பி.
மயிலாடுதுறையில் குட்கா விற்பனை தடை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் ஒட்டினார்.
மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி அரசு மேல்நிலை பள்ளியில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை விற்பனை தடை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே 100மீட்டர் தூரத்திற்குள் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்றால் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் தண்டனை வழங்கப்படும் என்று அப்போது எஸ்.பி. சுகுணாசிங் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி சுவற்றிலும், அருகில் உள்ள கடைகளிலும், பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகளில், பான்பராக், குட்கா, போன்ற அரசு தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்க கூடாது என்கிற சுவரொட்டியை, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஒட்டினார்.
பின், இதுபோன்ற போதை தரும் பொருட்களை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அவ்வாறு, அரசு தடை செய்த, பான்பராக், குட்கா, போன்ற பொருட்களை விற்கும், கடைகளை காவல்துறைக்கு 9442626792 என்கிற அலைபேசி எண்ணுக்கு தகவல் தரும்படியும், தகவல் தருபவர்களின் இரகசியம் காக்கப்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu