தருமபுரம் ஆதீன நிர்வாகிகள், ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய குருமகா சந்நிதானம்
ஆதீன நிர்வாகிகள், ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய குருமகா சந்நிதானம்
தருமபுரம் ஆதீனத்தில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆதீனத் திருமடத்தில் நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், தேங்காய், பழம், இஞ்சி, மஞ்சள் கொத்து அடங்கிய தொகுப்பினை பொங்கல் பரிசாக வழங்கி அருளாசி கூறினார்.
நிகழ்ச்சியில், ஆதீனக் கட்டளைகள் தம்பிரான்கள், ஆதீனம் மற்றும் ஆதீனக்கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், விவசாயிகள் 4 நாள்கள் தன்னுடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றியை மெய்மறந்து கொண்டாடக்கூடிய தமிழர் திருநாளாக, மகர சங்கராந்தி விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க உழைப்பிற்கு நன்றி தெரிவிக்கின்ற விழாவாகவும், பெரியோரை வணங்கும் விழாவாகவும், சூரியன், இந்திரனை கொண்டாடுகின்ற விழாவாகவும் அமைந்துள்ளது. அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சிறப்போடு பொங்கல் விழாவை கொண்டாட செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை போன்றி வணங்குகின்றோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்ஆசிகள் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu