ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம்
புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தருமை ஆதீனத்தில் வழிபாடு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையொட்டி தெலுங்கானா ஆளுனனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசைசவுந்தர்ராஜன் கோயிலுக்கு வருகைதந்தார். அவருக்கு தருமை ஆதீனம் சார்பில் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் பூர்ணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆசிபெற்றார். தொடர்ந்து குருமகா சன்னிதானத்துடன், அமிர்தகடேஸ்வரர் காலசம்ஹாரமூர்த்தி அபிராமி அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கோபுர கலசங்களுக்கு நவதானியங்கள் இட்டு வழிபாடு நடத்தினார் .
கோவில் கோபுரத்தின் தங்க முதல் கலசத்தை ஆதீனம் கோபுரத்தில் பொருத்தும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஆதீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெறும் தேதி அன்று ஹைதராபாத் புதுச்சேரிக்கு விமான சேவை தொடங்கும் நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ள இயலாது என்பதால் இன்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும் தினத்தில் கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொண்டேன். கொரோனாவுக்கு அடுத்ததாக பக்தர்கள் கூட்டத்துடன் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் தொடரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். மயிலாடுதுறை தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்குவதற்கு ரயில்வே துறை அமைச்சரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்றார்.
இதில் புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா,பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu