அரசின் திட்டபணிகள் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் : திமுக எம்எல்ஏ பேச்சு

அரசின் திட்டபணிகள் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் : திமுக எம்எல்ஏ பேச்சு
X

சீர்காழியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற  நகர திமுக பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் 

சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

அரசின் திட்டபணிகள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியாக அமையும் என திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன் பேசினார்.

சீர்காழி நகர திமுக பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி,மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆர்.கலைவாணன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், டாக்டர்.பன்னீர்செல்வம்,நகர துணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினரும்,சீர்காழி எம்எல்ஏவுமான எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், சீர்காழி நகராட்சி 24வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் வேட்பாளருக்கு போட்டியாக திமுகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாகவோ வேறு எந்தவகையிலும் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு எதிராக செயல்படக் கூடாது.போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்க பொறுப்புகள் வழங்கிட பரிசீலிக்கப்படும் என்றார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா.முருகன் பங்கேற்று பேசுகையில், சீர்காழி நகராட்சியில் உள்ள 24வார்டுகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாகுபாடின்றி கட்சியினர் ஒன்றிணைந்து களபணியாற்றி வெற்றிபெறசெய்யவேண்டும். எதிர்கட்சியாக திமுக இருந்தபோதே சீர்காழி நகராட்சி தலைவர் பதவிகளை தொடர்ந்து வெற்றி பெற்று தக்க வைத்து வந்துள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் சீர்காழி நகர்மன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எளிதாக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் வெற்றி பெறமுடியும் என்றார்.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் செல்வமுத்துக்குமார்,திட்டை ஊராட்சிமன்ற தலைவர் பெரியசாமி,இளைஞரணி நிர்வாகி தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!