/* */

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
X

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ராமலிங்கம் எம்.பி, ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நேஷனல் ஹைவேஸ் ஆஃப் இந்தியா சார்பில் மத்திய அரசின் திட்டமான பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில், நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி, மருத்துவமனை கருத்தரங்க அறையில் குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர ன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரத்ததான முகாம் அமைப்பாளர்கள் 30 பேர் மற்றும் தொடர்ச்சியாக ரத்ததானம் வழங்கிவரும் தன்னார்வலர்கள் 40 பேருக்கு விருது மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.

Updated On: 7 Oct 2021 1:23 PM GMT

Related News