மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
X

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. தற்போது கொரோனா மூன்றாவது அலை, ஒமைக்ரான் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் டெல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ஹோப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கருவி ஆக்சிஜன் பிளான்ட்டை அமைத்துத் தந்துள்ளது.

இந்த ஆக்சிஜன் பிளான்ட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலையில், டெல் டெக்னாலஜிஸ்ட் நிறுவன கல்வி மற்றும் சுகாதார மண்டல தலைவர் சத்யா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் மருத்துவமனை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதன்மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!